Latest Post

இங்கிலாந்தில் 9 மாத இரட்டைக் குழந்தைகள் தானாகவே நீச்சலடித்து விளையாடுகின்றன

Written By Unknown on Monday, 10 December 2012 | 08:32


தென்மேற்கு இங்கிலாந்து நகரான கிளவ்ஸ்டர்ஷியரில் வசிக்கும் விக்டர் மற்றும் சர்லோட்டி ஆகியோரின் 9 மாத இரட்டைக் குழந்தைகளான வில்லியம் மற்றும் எலினிட்டா ஆகியோர் யாருடைய உதவியும் இல்லாமல் நீச்சல்குளத்தில் 25 மீட்டர் நீந்திச் சென்று விளையாடுவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. திறமை வாய்ந்த நீச்சல் வீரர்கள் செய்யும் அனைத்து சாகசங்களையும் அந்த இரட்டை குழந்தைகளும் தற்போது நிகழ்த்திக் காட்டுகின்றன. நீருக்குள் மூழ்கிய இந்த இரண்டு குழந்தைகளும் விளையாடுகின்றன, ஆடிப் பாடுகின்றன. அந்தக் குழந்தைகளுக்கு இந்தத் திறமை இயற்கையாகவே அமைந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த சின்னஞ்சிறு வயதில், நீச்சலில் அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றன என்று இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அந்த இரட்டைக் குழந்தைகள் நீச்சல்குளத்தில் செய்யும் ஒவ்வொரு சாகசங்களும் அங்குள்ள பார்வையாளர்களையும் பயிற்சியாளர்களையும் மிரளவைக்கின்றன.

'சீன்' பட நடிகைகளுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தியா இருக்குமாம், லைபும் நல்லாருக்குமாம்!

Written By Unknown on Sunday, 9 December 2012 | 04:36


லண்டன்: மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆபாசப் படங்களில் நடிக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்குமாம். அதேபோல வாழ்க்கைத் தரமும் சிறப்பாக இருக்குமாம். இதை ஒரு சர்வே கூறியுள்ளது.
ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச் என்ற பத்திரிக்கை இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்தான் இப்படிக் கூறியுள்ளனர்.
 female porn stars have higher self
அதில் கூறப்பட்டுள்ள சுவாரஸ்ய விஷயங்கள்...
செக்ஸ் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்குமாம். பிற பெண்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் கூடுதல் நம்பிக்கையோடு இருப்பார்களாம். அதேசமயம், அவர்கள் உளவியல் பிரச்சினைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்காமல் திடமான மனதுடன் இருப்பார்களாம்.
அவர்கள் செக்ஸ் படங்களில் நடிக்க அவர்கள் சிறு வயதில் செக்ஸ் சித்திரவதைகளை அனுபவித்திருப்பார்கள் என்ற பொதுவான நம்பிக்கையையும் இந்த சர்வே தகர்த்துள்ளதாம். காரணம், பெரும்பாலான செக்ஸ் பட நடிகைகள், விரும்பியே இந்தத் துறைக்கு வருகின்றனராம். அதாவது சுய காலில் நிற்கும் ஆர்வம், தன்னம்பிக்கையைப் பெறுவது, வாழ்க்கையை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் மனப் பக்குவம் காரணமாகவே அவர்கள் இந்தத் துறையை தேர்வு செய்து வருகின்றனராம்.
மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆபாசப் பட நடிகைகள் எதையும் பாசிட்டிவான கோணத்துடன் அணுகுவார்களாம். செக்ஸ் குறித்த திருப்திகரமான உணர்வும் இவர்களுக்கு இருக்குமாம். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப் பக்குவமும் இவர்களுக்கு இருக்குமாம்.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஷிப்பன்ஸ்பர்க் பல்கலைக்கழகம், டெக்ஸாஸ் மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
இந்த ஆய்வுக்காக ஆபாசப் படம் உள்ளிட்டவற்றில் நடித்து வரும் 18 முதல் 50 வயது வரையிலான 177 நடிகைகளிடம் தகவல் சேகரித்தார்களாம்.

ஆபாச தளத்தில் போன் நம்பருடன் படங்கள்- நடிகை சுமா அதிர்ச்சி - போலீசில் புகார்!


Tamil Actress Photos In Adult Website தமிழில் நடித்து வரும் சுமா என்ற நடிகையின் படங்கள் ஆபாச இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது.
நடிகை சுமா என்றே ரிஷிகா, பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்தவர். அர்ஜூன் ஜோடியாக ‘துரை' படத்தில் நடித்தார். 2008-ல் இப்படம் ரிலீசானது.
தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘வனயுத்தம்' படத்தில் நடித்து வருகிறார்.
சுமாவின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சுமாவின் ஆபாச படங்களுடன் செல்போன் நம்பரையும் பதிவு செய்து, 'விருப்பம் இருந்தா கூப்பிடுங்க... கொடுக்கும் விலைக்கு ஏற்ற சேவை' என்றெல்லாம் தன் 'சேவை' பற்றி அவரை கூறுவது போல ஆங்கிலத்தில் ப்ரொபைல் உருவாக்கி வைத்துள்ளனர்.
தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சுமா, இன்டர்நெட்டில் தன்னை இழிவுபடுத்தி படங்கள் வெளியிட்டுள்ளதாக மும்பை போலீசில் சுமா புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில், "நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்னை தப்பானவள்போல் சித்தரித்து இன்டர்நெட்டில் படங்கள் வெளியிட்டு உள்ளனர். அதில் என் போன் நம்பரையும் குறித்துள்ளனர். இதனால் எனக்கு தவறான எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன.
எனது தாய் ஆசிரியை வேலை பார்க்கிறார். தந்தை சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் மாடலிங் செய்து நடிக்க வந்தேன். என்னை இழிவுபடுத்தி படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

லைப்ரரிக்குள் புகுந்து செக்ஸ் ஆட்டம்.. டென்ஷனான அமெரிக்க பல்கலைக்கழகம்


 Top American University Library Porn Storm நியூயார்க்: நியூயார்க்கைச் சேர்ந்த கார்னல் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள லைப்ரரிக்குள் புகுந்த ஒரு மாடல் அழகி, அங்கு ஆபாச அசைவுகளில் ஈடுபட்டு அதை தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் மாடல் அழகி கேமரூன் நைட் என்று கூறப்படுகிறது. இவர் ஆபாசப் படங்கள் பலவற்றில் நடித்திருப்பவர் ஆவார். பல்கலைக்கழக லைப்ரரிக்கு வந்துள்ள அவர் அங்குள்ள கார்பென்டர் ஹால் என்ற அரங்குக்குப் போயுள்ளார். பி்ன்னர் தான் கையோடு கொண்டு வந்திருந்த செக்ஸ் பொம்மைகளை எடுத்து அதை வைத்து பல்வேறு ஆபாச செயல்களில் ஈடுபட்டார்.இதை தனது செல்போனில் பதிவு செய்தார்.
இந்தக் காட்சிகள் மொத்தம் 43 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் ஐந்து நிமிட வீடியோக் காட்சியை கல்லூரி நோட்டீஸ் போர்டில் போட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப் பகலில் இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மற்றவர்கள் நூலகத்தில் ஆங்காங்கு படித்துக்கொண்டிருந்த நிலையி்ல் கேமரூன் இந்த செக்ஸ் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறதாம்.

ஆபாச படங்களில் நடித்ததை நினைத்து வெட்கப்படவில்லை: சன்னி லியோன்


Sunny Leone Is Not Ashamed Her Past மும்பை: தனது கடந்த காலத்தை நினைத்து வெட்கப்படவில்லை என்று ஆபாச பட நடிகையாக இருந்து பாலிவுட்டில் நுழைந்திருக்கும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
ஆபாச பட நடிகையாக இருந்தவர் கனடாவில் வாழும் இந்தியரான சன்னி லியோன். ஏராளமான XXX கிரேட் புளூ பிலிம்களில் நடித்தவர்.
ஜிஸ்ம் 2 என்ற இந்தி படம் மூலம் பாலிவுட்டுக்கு வந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படத்தைப் பார்த்தவர்கள் சன்னி லியோன் ஒரு உணர்ச்சியே இல்லாத மரக்கட்டை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் இருப்பது பற்றி சன்னி லியோன் கூறுகையில்,
இந்திய மக்கள் என் மீது காட்டும் அன்பைப் பார்த்து ஆச்சியப்படுகிறேன். அடுத்த 2 ஆண்டுகள் இங்கு தான் படத்தில் நடிக்கவிருக்கிறேன். என்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய பூஜா பட்டிற்கு நன்றி. என்னை பலரும் ஆபாச பட நடிகை என்று சொல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இது எனக்கு புதிய உலகம். இங்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை வைத்து தான் மக்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எனது கடந்த காலத்தை நினைத்து வெட்கப்படவில்லை என்றார்.
அவர் அடுத்ததாக தி டர்ட்டி பிக்சரை தயாரித்த ஏக்தா கபூரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5ல் 1 ஜெர்மன் இளைஞர் இன்டர்நெட்டுக்காக செக்ஸை தியாகம் செய்ய ரெடி!


 One Five Germans Ready Sacrifice மெல்போர்ன்: ஜெர்மானியர்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் செக்ஸ் உறவை விட இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று நியோன் என்ற பத்திரிக்கைக்காக மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
நியோன் என்ற பத்திரிக்கைகாக போர்ஸா என்னும் நிறுவனம் இன்டர்நெட் இணைப்பு வைத்திருக்கும் 18 முதல் 35 வயதுக்குட்பட்டோரிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 18 சதவீதம் பேர் செக்ஸை விட இன்டர்நெட்டை பயன்படுத்த தான் அதிக ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இன்டர்நெட் பயன்பாடு மிகவும் முக்கியம் என்று 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இன்டர்நெட் முக்கியம் தான் ஆனால் அதைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை உள்ளது என்று நியோன் பத்திரிக்கை தெரிவி்த்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின் மூலம் இன்டர்நெட்டை கவனமாகவும், விரும்பியும் பயன்படுத்தும் தலைமுறையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்று அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெரா ஸ்ரூடர் தெரிவித்ததாக தி டெய்லி டெல்கிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் போர்னோகிராபி: பிஞ்சில் பழுக்கும் இங்கிலாந்து சிறுவர்கள்.


 Misusing Internet England Children லண்டன்: இங்கிலாந்தில் மிக இளம் வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது அந்த நாட்டு காவல்துறையையும், அரசையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் வரை கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைதாகியுள்ளனராம்.
ஆன்லைன் மூலம் போர்னோ படங்களைப் பார்த்து இவர்கள் கெட்டுச் சீரழிவதாகவும், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பள்ளிச் சிறார்களிடையே இத்தகையக குற்றப் போக்கு அதிகரித்து வருவது காவல்துறையினரை அதிர வைத்துள்ளதாம். இங்கிலாந்து காவல்துறை கடந்த ஒரு வருடத்தில் 10 வயது சிறுவன் ஒருவனை கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளது. மேலும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைதாகியுள்ளனராம்.
ஆன்லைன் போர்னோகிராபிதான் பெருமளவில் இளம் சிறார்கள் மனதைப் பாழ்படுத்தி வருவதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
செக்ஸ் என்றால் என்ன, செக்ஸ் உறவு என்றால் என்ன, எப்படி அதை அடைவது என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்டர்நெட்டில் படு தாராளமாக கிடைப்பது இளம் சிறார்களிடையே பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் சிறார்கள் மத்தியில் பாலியல் விஷயங்களில் மனதில் விஷத்தைக் கலப்பது போல இன்டர்நெட் தற்போது இருக்கிறது. இன்டர்நெட்டில் தேவையில்லாததைப் பார்த்துத்தான் இளம் சிறார்கள் கெட்டுப் போகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மைதான் என்பது போல இப்போது 10 வயது சிறுவன் கற்பழிப்பு வழக்கில் கைதாகியிருப்பது உள்ளது என்கிறார் குழந்தைகளுக்கான இன்டர்நெட் பாதுகாப்பு கூட்டணி என்ற அமைப்பின் ஜான் கார்.
இன்டர்நெட்டில் ஆபாசப் படம் பார்ப்பது உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் ஒருவர் கம்ப்யூட்டர் வாங்கும்போது பல்வேறு வகையான பில்டர்களையும் வாங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்களாம்.
ஆனால் இந்த நடவடிக்கைகளால் ஆபாசப் படம் பார்ப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறப்படுகிறது. போலீஸாரிடம் சிக்கிய ஒரு சிறுவனின் கதையைப் பாருங்கள்...
12 வயதான சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 வயது சிறுமியை கற்பழித்து விட்டான். அவனிடம் விசாரணை நடத்தியபோது ஆன்லைன் போர்னோகிராபி படத்தைப் பார்த்த அவன், தானும் வளர்ந்த ஒரு ஆண்மகன்தான் என்பதை நிரூபித்துக் கொள்ள அந்த சிறுமியை கற்பழித்தானாம். அதாவது தனது ஆண்மையைப் பரிசோதித்துப் பார்க்க இப்படிச் செய்தானாம்.
அந்தப் பெண்ணைக் கற்பழிக்க முடிவு செய்த பின்னர் பல ஆபாசப் பட தளங்களைப் பார்த்து திறமையை வளர்த்துக் கொண்டானாம். பின்னர் ஒரு தோட்ட வீட்டின் பின்புறம் உள்ள ஷெட்டுக்கு அந்த சிறுமியைக் கூட்டிக் கொண்டு போய், தான் வீடியோ படத்தில் பார்த்தது போல செய்து பலாத்காரம் செய்துள்ளான்.
அந்த சிறுமி தனது பெற்றோரிடம் வயிறு வலிப்பதாக கூறியதால் அவர்கள் என்ன ஏது என்று விசாரித்தபோது உண்மை தெரிய வந்ததாம்.
அந்த சிறுவன் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 2011 ஜனவரி 31ம் தேதி வரை பலமுறை இப்படி அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தனது சக நண்பன் ஒருவன் முன்னிலையிலும் கூட அந்த சிறுமியை அவன் பலாத்காரம் செய்துள்ளான்.
தற்போது அவன் சமூக சேவகர்களின் நேரடிக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான். 18 வயது வரை அவனை இவர்கள் கண்காணித்து வருவார்களாம்.
நம் ஊரிலும் தற்போது பாலியல் குற்றங்களுக்காக கைதாகும் பள்ளிமாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு காரணம் இணையதள பயன்பாடும், செல்போன்களில் ஆபாசப் படங்களை பார்ப்பதும்தான் காரணம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இணையத்தில் உலவும் 'டேஞ்சரஸ்' பிரபலம் சன்னி லியோனாம்!


Sunny Leone Named The Most Dangerous Celebrity இணையதளத்தில் அதிகம் பேர் பார்க்கும் பிரபலமாக சன்னி லியோன் உள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் சைபர்ஸ்பேஸ் எனப்படும் இணையதள உலகின் மிகவும் ஆபத்தான பிரபலம் சன்னி லியோன் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மெக்அபீ பாதுகாப்பு மென்பொருள் ஆய்வு மேற்கொண்டது. இதில் முன்னாள் போர்ன் ஸ்டாரும் தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னிலியோன் பக்கத்திற்கான லிங்க்கை பார்வையிடுவது ரிஸ்க்கானது என்று தெரியவந்துள்ளது. அவருக்கு 9.95 சதவிகிதம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்த இடத்தில் கத்ரீனாகைப், கரீனா கபூர் இடம் பெற்றுள்ளனர்.
கத்ரீனா கைப் கடந்த ஆண்டின் மிக அதிக ஆபத்தான பிரபலமான தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு கத்ரீனா 8.25 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக கரீனா கபூர் 6.67 சதவிகிதம் பெற்று மூன்றாவது இடம் பெற்றுள்ளார்.
பிரியங்கா சோப்ரா, பிபாஷாபாசு ஆகியோர் நான்கு, ஐந்தாவது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக வித்யாபாலன், தீபிகா படுகோனோ, ஐஸ்வர்யாராய் பச்சன் உள்ளனர்.
பூனம்பாண்டேவிற்கு இதில் கடைசி இடம்தான் கிடைத்துள்ளது. ஆண்களில் மிகவும் ஆபத்தான பிரபலமாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க இ.மெயில் பத்திரமா இருக்கா? செக் பண்ணுங்களேன்!


 Top 25 Worst Passwords Revealed இணையதள பயன்பாடு இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இ.மெயில் என்பது அவசியமான ஒன்றாகிவிட்டதால் அதற்காக உருவாக்கும் மின்னஞ்சல் முகவரியும், பாஸ்வேர்டும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். இல்லையெனில் அதைவைத்து மோசடி செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
இது தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் பலரும் பாதுகாப்பற்ற பாஸ்வேர்டுகளையே பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் பல பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளன. 2012ம் ஆண்டில் இதுவரை Hackers-களினால் திருடப்பட்ட மிகவும் மோசமான 25 பாஸ்வேர்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்ப்லாஸ்டேடா இணையதளம் வெளியிட்டுள்ள மோசமான பாஸ்வேர்டுகள்:
123456, 12345678, abc123, qwerty, monkey, letmein, dragon, 111111, baseball, iloveyou, trustno1, 1234567, sunshine, master, 123123, welcome, shadow, ashley, football, jesus, michael, ninja, mustang,
password1
எனவே இதுபோன்ற பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், மின்னஞ்சல் கணக்குகளை ஓரளவுக்கேனும் பாதுகாக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
நம் ஊர் இளைஞர்கள் பெரும்பாலும் காதலியின் பெயரையோ, அவர்களின் பிறந்தநாளையோதான் பாஸ்வேர்டாக பயன்படுத்துகின்றனர். எனவே அவை திருடப்பட வாய்ப்பே இல்லைதானே.

உஷார்... இண்டர்நெட்வாசிகளின் விவரங்களை கோருவதில் இந்தியாவுக்கு 2-வது இடமாம்!


 Is Second Only Us Accessing Private Details Netizens சென்னை: இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது. அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.
நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. நடப்பாண்டில் இதுபோல் 596தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!

துபாயில் டாக்சியில் வைத்து செக்ஸ் .. இங்கிலாந்து பெண்ணுக்கு 3 மாத சிறை


 Uk Woman Is Jailed 3 Months Dubai துபாய்: துபாயில், டாக்சி ஒன்றின் பின் சீட்டில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு அங்கு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் ரிபெக்கா பிளேக். இவர் துபாயில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல துபாயில் வெல்டராக பணியாற்றி வருபவர் கானர் மெக்ரெட்மான்ட். இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு - டாக்சி ஒன்றின் பின் சீட்டில் வைத்து செக்ஸ் உறவு கொண்டது.
இந்த இருவருக்கும் தற்போது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனைக்குப் பின்னர் இருவரும் நாடு கடத்தப்படுவர்.
29 வயதான ரிபெக்கா, இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இவரும் அயர்லாந்தைச் சேர்ந்தவரான கானரும், மது அருந்தியுள்ளனர். கிட்டத்தட்ட 10 மணி நேரம் குடித்த அவர்கள் பின்னர் ஒரு டாக்சிக்குச் சென்றனர். அங்கு டாக்சியின் பின் சீட்டுக்குள் பதுங்கிய இருவரும் செக்ஸ் உறவு கொண்டதாக தெரிகிறது.
இந்த சமயம் பார்த்து அந்த டாக்சியின் டிரைவர் வந்து விட்டார். காரின் ரியர் வியூ மிர்ரரைப் பார்த்த அவர் அதில் ஒரு பெண் மேலாடை இல்லாமல் இருப்பதையும், ஒரு ஆண் மீது படர்ந்திருப்பதையும், முக்கல் முனகல் வருவதையும் பார்த்து அதிர்ந்த அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். ஆனால் தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றும் நிர்வாண கோலத்தில் இருக்கவில்லை என்றும் கோர்ட்டில் இருவரும் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் எடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனையிலும் கூட அவர்கள் உறவு கொண்டதாக ரிசல்ட் வரவில்லை.
இருப்பினும் இருவருக்கும் தலா 3 மாத சிறைத் தண்டனை விதித்து துபாய் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் இருவரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.
இருவரும் தற்போது அப்பீல் செய்யவுள்ளனர். இதையடுத்து இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் போன கையோடு பாய் பிரண்ட் பிடித்த இலியானா


What Wrong Live In Relationship மும்பை: திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதில் தவறில்லை என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த இலியானா அவ்வப்போது தமிழ் படங்களிலும் தலையைக் காட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் பர்ஃபி பட வெற்றிக்குப் பிறகு ஜாகையை மும்பைக்கே மாற்றிவிட்டார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர் இந்தி நடிகர் ஷாஹித் கபூருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
ஷாஹித் கபூர் இலியானா வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். பாலிவுட்டில் இதுபோன்ற லிவ் இன் ரிலேஷன்ஷிப்பெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. இத்தனை நாட்கள் பிரியங்கா சோப்ராவுடன் வாழ்ந்த ஷாஹித் அவரைப் பிரிந்து இலியானாவிடம் வந்திருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து இலியானா கூறுகையில்,
மனதிற்கு பிடித்தவருடன் நட்பாக இருப்பது, டேட் செய்வது தவறில்லை. நான் மாடர்ன் பெண். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தப்பில்லை என்றார்.

அம்மா சொல்லித்தான் சிறுமியை சிறுநீர் குடிக்க வைத்தேன்: வார்டன்


 Girl S Mother Be Blamed Warden கொல்கத்தா: விஸ்வபாரதி பல்கலைக்கழக்திற்கு சொந்தமான பள்ளி ஹாஸ்டலில் தங்கிப் படித்த 5ம் வகுப்பு மாணவி படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அதை அவரை குடிக்க வைத்தார் வார்டன். ஆனால் சிறுமியின் தாய் சொல்லித் தான் அவரை சிறுநீரைக் குடிக்க வைத்ததாக வார்டன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேத்தனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பதா பவன் பள்ளியில் 5ம் வகுப்பு படித்த மாணவி புனிதா மிஸ்ட்ரி(10). ஹாஸ்டலில் தங்கிப் படித்த புனிதா படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது சிறுநீரை அவரையே குடிக்க வைத்துள்ளார் வார்டன் உமா போட்டர். இதையடுத்து வார்டன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை சமர்பித்துள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுவதாவது,
புனிதாவின் தாய் தனது மகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை குறித்து ஹாஸ்டல் வார்டன் உமாவுடன் பேசியுள்ளார். இனியும் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்கச் செய்வதற்காக ஒரு முறை சிறுமியை அவரது சிறுநீரைக் குடிக்க வைக்குமாறு புனிதாவின் தாய் தான் வார்டன் உமாவிடம் கூறியுள்ளார். அவர் சொன்னபடி தான் வார்டன் சிறுமியை சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இறுதி அறிக்கை வரும் வரை எதையும் கூற முடியாது என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வார்டனிடம் தான் அவ்வாறு கூறவேயில்லை என்று புனிதாவின் தாய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஸ்வபாரதி பல்கலைக்கழக பதிவாளர் மணிமுகுத் மித்ரா, பதா பவன் தலைமை ஆசிரியை போதிரூபா சின்ஹா மற்றும் ஒரு ஆசிரியை ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரை மீண்டும் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்ததாக சிறுமியின் தாய் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்சின் தோல்வி.. கூகுளின் வெற்றி!


 Google Searches Smbs Ignored Indian It Companies பெங்களூர்: உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து மாபெரும் ஆர்டர்களைப் பெறுவதிலேயே இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ரூ. 80,000 கோடி சந்தை கொண்ட இந்தியாவின் நடுத்தர, சிறிய நிறுவனங்களுக்கு தனது தொழில்நுட்ப சேவையை வழங்கி அந்த சந்தையை வளைத்துப் போடுவதில் கூகுள் நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை சுமார் 1,000 நிறுவனங்கள் கூகுளின் சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் எல்லாமே இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவை ஆகும்.
அமெரிக்கா, ஐரோப்பா, இப்போது வளைகுடா நாடுகள் பக்கமே இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் வழக்கமாக கவனம் செலுத்துகின்றன. பொதுவாக உள்நாட்டு சந்தையை அவை மதிப்பதே இல்லை.
இந் நிலையில், இந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப சேவைகளை கூகுள் வழங்க ஆரம்பித்துள்ளது. கூகுள் சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களில் வோல்டாஸ், யெபி, நீல்கமல், ஹிராநந்தனி, இன்டியா இன்போலைன் போன்றவை முக்கியமான நிறுவனங்களாகும்.
வேர்ட் பிராஸஸிங், இமெயில் சேவை, தரவுகள் (டேட்டா) சேமிப்பு உள்பட தன்னிடம் உள்ள எல்லா வகையான சேவைகளையும் கூகுள் இவர்களுக்கு வழங்குகிறது.
இவர்களை குறி வைக்க என 'India, Get Your Business Online' என்ற புதிய விற்பனைத் திட்டத்தையும் தொடங்கி, தனது மார்க்கெட்டிங் டீமை முழுமையாக களமிறக்கி விட்டுள்ளது கூகுள்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 50,000 நடுத்தர, சிறிய தொழில் நிறுவனங்களை தனது வலையில் இழுத்துவிட்ட கூகுள், இவர்களுக்கு இலவச கூப்பனையும் வழங்குகிறது. இதை வைத்து கூகுள் இணையத்தளத்தில் தங்களது நிறுவனத்தையும் பொருட்களையும் இவர்கள் இலவசமாக விளம்பரம் செய்யும் அனுமதிக்கிறது.
2014ம் ஆண்டுக்கள் 5 லட்சம் இந்திய தொழில் நிறுவனங்களை தனது சேவைக்குள் கொண்டு வருவது கூகுளின் திட்டமாம்.

நூற்றாண்டின் இறுதியில் பூமியின் நிலைமை தலைகீழாகிவிடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை


வாசிங்டன்: நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்...
 Earth Headed Catastrophic Collapse பெருகி வரும் மக்கள் தொகையால் நீர், வனம் மற்றும் விளைநிலங்களின் பயன்பாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவுதான் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் போன்றவை இல்லாத ஒரு உலகம் இருந்த நிலையை நோக்கி இப்பொழுது நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நூற்றாண்டின் இறுதியில் அனேகமாக பூமியின் அமைவிடமே விசித்திரத்துக்குரியதாகவும் இருந்துவிடும் என்றும் அமெரிக்காவின் கலிபோனியா விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல.. புவி வெப்பமயமாதல் மற்றும் சூழலியல் தொடர்பான விஞ்ஞானிகள் பலரும் இன்னும் அதிர்ச்சியூட்டும் ஆருடங்களை வெளியிட்டு வருகின்றனர். நம் கண்கூடே நேற்று நாம் பார்த்த பறைவியினங்களும் தாவர இனங்களும் காட்சிப் பொருளாகிவிட்ட நிலையில் இனிவரும் காலங்களும் இப்படித்தான் இருக்குமாம்! பல விலங்கினங்கள், தாவர இனங்கள் பூண்டோடு அழிந்து போவது மட்டுமல்ல.. புதிய புதிய விலங்கினங்களும் தாவர இனங்களும் விஸ்வரூபமாக பிறப்பெடுத்து பேரிடர்களுக்கு வழிவகை செய்யக் கூடிய சாத்தியங்களும் இருக்கின்றனவாம்.
நாம் இப்பொழுது பனிப்பாறைகளின் கடைசி யுகத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.. இன்னும் சிறிதுகாலம்தான்... பனிப்பாறைகள் இல்லாத ஒரு உலகம் உருவாகிவிடக் கூடும். தொழில்துறை வளர்ச்சியினால் வளிமண்டத்தில் 35 விழுக்காடு அளவுக்கு கரியமில வாயுவை செலுத்தியிருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம்..
பூமிப்பரப்பில் இப்பொழுது 43 விழுக்காடு பரப்பானது நகரங்களாகவும் விளைநிலங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டது. பனிப்பிரதேசத்தின் பரப்பளவு 30 சதவீதமாக இருக்கிறது. எஞ்சிய நிலப்பரப்பும் பெருகிவரும் மக்கள் தொகையால் நிச்சயம் வேட்டையாடப்பட்டு பூமிப் பந்து பிரளயத்தை எதிர்நோக்கலாம்.
மாற்றம் என்பது மட்டுமே இந்த பூமிப் பந்தில் மாறாதது என்கிறபோது மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் தாவரங்களும் மாறிக்கொண்டே இருப்பதும் கூட புதியதோர் உலகுதானோ?

வெறும் பிராவுடன் 'டிரட்மில்'லில் ஓடுவேன்.. சமையல் கலை எழுத்தாளர் நிகல்லா!


 I Just Wear Bra On The Treadmill Nigella லண்டன்: பிரபல சமையல் கலை எழுத்தாளரும், டிவி தொகுப்பாளருமான நிகல்லா லாசன் தனது உடற்பயிற்சி முறை குறித்து விளக்கியுள்ளார். அதில், பூட்டிய அறைக்குள் வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு டிரட்மில்லில் ஓடி உடற்பயிற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், எனது எடையைக் குறைப்பதிலும், உடலை வனப்புடன் வைத்துக் கொள்வதிலும் நான் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்.
உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால்தான் நாம் தொடர்ந்து சாப்பிடவும் முடியும். அதற்காகவே நான் தினசரி உடற்பயிற்சி செய்கிறேன்.
என் வீட்டு மாடியில் டிரட்மில் வைத்துள்ளேன்.அறைக்குள் போய் பூட்டிக் கொண்டு விடுவேன், உள்ளே யாரும் வர முடியாது. பின்னர் வெறும் பிராவுடன் டிரட்மில்லில் ஏறிக் கொண்டு ஓட ஆரம்பிப்பேன். கூடவே சத்தமாக பாட்டைப் போட்டு விடுவேன். கூடவே நானும் படு சத்தமாக பாடுவேன். பயங்கர சத்தம் போட்டு பாட்டுப் பாடினால் தலையில் உள்ள பாரம் எல்லாம் இறங்கி விடும் என்றார் லாசன்.
நிகல்லாவுக்கு வயது 52 ஆகிறது. ஆனாலும் அதற்கான அறிகுறி எதுவும் உடலிலும், முகத்திலும் தெரியாத அளவுக்கு படு இளமையாக, அழகாக, கட்டுக்கோப்பாக காட்சி அளிக்கிறார். இதன் ரகசியம் என்னவோ என்று கேட்டால், இப்போதெல்லாம் நான் குடிப்பதில்லை. தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன் என்று சிரித்தபடி கூறுகிறார் நிகல்லா.

பூமிக்கு அருகில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது


 Planet Found Near Earth May Have Li கலிபோர்னியா: பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் வாஷிங்டன் நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் இந்த புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்
புதிய கிரகமானது பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இந்த புதிய கிரகத்துக்கு 581ஜி என்று பெயரிட்டுள்ளது. பூமியைவிட இரண்டு மடங்கு பெரியதாக உள்ள இதில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இதன் மேற்பரப்பில் திரவம் உறைந்த நிலையில் இருப்பதாகவும் அவை கிரகத்துக்குள் பாய்ந்து செல்லக் கூடியதாகவும் இருக்கலாம் என்கின்றார் இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்டீபன்வாட் என்ற அறிஞர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் என்ன மாதிரியான காலநிலையை உணரமுடியுமோ அதே ஒரு சூழலை இந்த கிரகத்தில் உணர முடியும் என்கின்றனர்.

பூமி மீது மோதுமா 'அபோபிஸ்' விண் கல்?


 Sun Could Save Earth From Collision With Asteroid வாஷிங்டன்: 2036ம் ஆண்டில் பூமியின் மீது 200 மீட்டர் விட்டம் கொண்ட 'அபோபிஸ்' என்ற விண் கல் மோத வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
2012 QG42 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு விண் கல் அடுத்த வாரம், 14ம் தேதி, பூமிக்கு அருகே, அதாவது 2.84 மில்லியன் கி.மீ. தூரத்தில், கடந்து செல்லவுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இதே விண் கல் பூமியிலிருந்து 26,9000 கிலோ மீட்டர் அருகே பறந்து செல்லும். அண்டவெளியின் விசாலத்தோடு ஒப்பிடுகையில் இந்த தூரம் மிக மிக நெருக்கமானதாகும். ஆனாலும் இதன் வட்டப் பாதையை வைத்துக் கணக்கிடுகையில் இது பூமியை மோத வாய்ப்பில்லை.
இது ஒரு புறம் இருக்க அபோபிஸ் என்ற ஒரு விண்கல் 2036ம் ஆண்டு பூமியை மோதலாம் என்று ஒரு பிரிவு விஞ்ஞானிகளும், சூரியக் கதிர்வீச்சு இந்த விண்கல்லின் போக்கை மாற்றிவிடும், இதனால் பூமி மீது மோதாது என பெரும்பாலான விஞ்ஞானிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் 2029ம் தேதி ஏப்ரல் 13ம் தேதி பூமியிலிருந்து 38,000 கி.மீ. தூரத்தில் பறந்து செல்லவுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் அப்போது இதன் வட்டப் பாதையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
இதன் பிறகு 2036ம் ஆண்டில் இந்த விண்கல் மிக மிக அருகே வர வாய்ப்புள்ளது. ஆனால், இதன் சூரிய கதிர்வீச்சுகளும், 'Yarkovsky effect' எனப்படும் இயற்பியல் விதியும் சேர்ந்து அதன் பாதையையும் வேகத்தையும் அதிகரிக்க வைத்து திசை திருப்பி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த விண்கல்லின் போக்கு குறித்து அமெரிக்காவின் நாஸா மற்றும் ரஷ்யன் இன்ஸ்ட்டியூட் ஆப் அஸ்ட்ரானமி விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
இந்த விண்கல் மோதினால் பல நூறு அணு குண்டுகள் வெடித்த அளவுக்கு சேதம் ஏற்படும் என்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு சூடுவைத்த இந்திய தம்பதிக்கு 18 மாதம் சிறை: நார்வே கோர்ட் தீர்ப்பு


 Norway Row Indian Parents Sentenced To 18 Months நார்வே: குழந்தையை அடித்து துன்புறுத்திய இந்திய தம்பதியருக்கு நார்வே நீதிமன்றம் 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான்.
பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்து விட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாய் ஸ்ரீராமை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து சாய் ஸ்ரீராம், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசாரும் சந்திரசேகர் தம்பதியர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தைகளை மிரட்டி மோசமாக நடத்துதல், வன்முறை, பிற தவறான செயல்கள் புரிதல் போன்ற குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு ஆஸ்லோ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சந்திரசேகர் தம்பதியர் தங்கள் மகனை அடித்து துன்புறுத்தியதுடன், சூடும் வைத்துள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, இந்தக் குற்றத்திற்காக சந்திரசேகர் தம்பதியருக்கு ஓராண்டுக்கும் அதிகமாக சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு கருத்தையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சந்திரசேகருக்கு 18 மாதமும், அவரது மனைவி அனுபமாவுக்கு 15 மாதமும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
சிறை தண்டனை பெற்றுள்ள சந்திரசேகர், டி.சி.எஸ். நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், அனுபமா இந்திய தூதரக அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே நாட்டில் குழந்தைகளுக்கான உரிமைகள் அதிகஅளவில் உள்ளன. அவர்களுக்கு சுகாதாரமான சூழ்நிலை இருக்கவேண்டும் என்றும் தனி அறை, விளையாட்டுப் பொருட்கள் கொடுக்கப்படவேண்டும் எனவும் நார்வே அரசு வலியுறுத்தி வருகிறது. அவர்கள் மீது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள் கொடுக்கவில்லை என்றும் அவர்களை தனியாக உறங்கவைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி கடந்த ஆண்டு இரண்டு இந்திய குழந்தைகளை காப்பகத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டனர் அந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் குழந்தையை துன்புறுத்திய குற்றத்திற்காக தற்போது இந்திய தம்பதியினருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிக்கன் வாங்கிக் கொடுத்து, சாப்பாடு போட்டு மாணவர்களுடன் உறவு வைத்துக் கொண்ட டீச்சர்



 Blonde Teaching Assistant 42 Had Unprotected
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான உதவி ஆசிரியை, தனது மாணவர்களுக்கு கேஎப்சிக்கு கூட்டிச் சென்று சிக்கன் வாங்கிக் கொடுத்து, இன்ன பிற உணவுகளை வாங்கிக் கொடுத்து அவர்களைத் தாஜா செய்து பின்னர் செக்ஸ் வைத்துக் கொண்டு தற்போது சிக்கியுள்ளார்.
வகுப்பு இல்லாத சமயங்களில் இந்த மாணவர்களுடன் அவர் செக்ஸ உறவு கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவரது பெயர் எம்மா வெப். திருமணமானவர். தான் விரும்பிய மாணவர்களுக்கு முதலில் செக்ஸியான எஸ்எம்எஸ்களை அனுப்பி வலையில் இழுப்பார். பின்னர் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து பின்னர் வீட்டுக்குக் கூட்டி்ச சென்று செக்ஸ் வைத்துக் கொள்வார்.
2 குழந்தைகளுக்குத் தாயான இவர், ஒருமுறை ஒரு மாணவனிடம் உறவு வைத்துக் கொண்டபோது உனது குழந்தை எனது வயிற்றில் வளருகிறதே என்று கூறி கிண்டலும் அடித்தாராம்.
இவர் மீது மொத்தம் 30 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதையடுத்து அவருக்கு கோர்ட் 32 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இவர் 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுடன் உறவு கொண்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. பெர்க்ஷயர் பள்ளியில் இவர் பணியாற்றி வந்தார். தற்போது சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

பார்வையற்ற இந்திய இளைஞருக்கு உயர் பதவி வழங்கிய அதிபர் ஒபாமா!


 Obama Appoints Blind Indian America வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் பார்வையற்ற இந்திய இளைஞருக்கு உயர்பதவி வழங்கி கவுரவித்துள்ளார் அதிபர் ஒபாமா.
அந்த இளைஞர் பெயர் சச்சின் தேவ் பவித்ரன். இவர் உட்டா பல்கலைக்கழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான திட்ட இயக்குனராக தற்போது பணியாற்றி வருகின்றார்.

2002-ம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகளில் இவர் பணியாற்றியுள்ளார். உட்டா பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.எஸ்., எம்.ஸ்., என பல பட்டங்களை பெற்றுள்ள இவருக்கு 2007-ம் ஆண்டு அமெரிக்காவின் பார்வையிழந்தவர்களுக்கான தேசிய சம்மேளனம், கென்னத் ஜெர்னிகன் ஸ்காலர்ஷிப் உதவி வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பின் உயர் பதவியில் சச்சின் தேவ் பவித்ரனை நியமித்து அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

'அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளின் மூலம் அனுபவம் பெறுவார்கள். இந்த நிர்வாகத்தில் அவர்கள் பணியாற்றுவதை எண்ணி நான் பெருமைப்படுகின்றேன்,' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

குழந்தைக்கு சூடு வைத்த வழக்கு: சிறை தண்டனையை எதிர்த்து நார்வே ஆந்திர தம்பதி அப்பீல்


ஆஸ்லோ: 7 வயது மகனை அடித்து, சூடு வைத்து துன்புறுத்தியதற்காக நார்வே நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆந்திர தம்பதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வசித்து வருபவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர். அவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான்.
பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்துவிட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுவனை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இது குறித்து சிறுவன், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசாரும் சந்திரசேகர் தம்பதியர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தைகளை மிரட்டி மோசமாக நடத்துதல், வன்முறை, பிற தவறான செயல்கள் புரிதல் போன்ற குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு ஆஸ்லோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சந்திரசேகர் தம்பதியர் தங்கள் மகனை அடித்து துன்புறுத்தியதுடன், சூடும் வைத்துள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சந்திரசேகருக்கு 18 மாத சிறை தண்டனையும், அனுபமாவுக்கு 15 மாத சிறை தண்டனையும் விதித்து கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சந்திரசேகர் தம்பதி அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சந்திரசேகர் தம்பதியை மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வரும் வரையில் சிறையில் அடைக்கக் கூடாது என்று அவர்களுடைய வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் இந்த தீர்ப்பு வரும் வரை அவர்களை வெளியே விடக்கூடாது என்று எதிர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்


திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட்.
2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது 100வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.
பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் மூலம் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக் கோளை தாங்கிச் சென்றது.
ராக்கெட் செலுத்தப்பட்ட 17வது நிமிடத்தில், முதலில் பிரெஞ்சு செயற்கைக் கோளை அது புவிவட்டப் பாதையில் விட்டது. அடுத்து ஜப்பான் செயற்கைக் கோள் புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.
100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் கண்டு களித்தார். இதற்காக அவர் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டா வந்திருந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும் வந்திருந்தார்.

ஒபாமா கொல்லப்பட்டுவிடுவார்.. ஃபேஸ்புக்கில் விளையாடி பெண்ணின் வேலைக்கு ஆப்பு


 Woman Lost Job Obama Assassination Facebook Posting கலிபோர்னியா: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவிக்கப் போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் களமிறங்கி வேடிக்கையாக ' 4 ஆண்டுகளில் ஒபாமா கொல்லப்பட்டுவிடுவார்' என்று எழுதியதற்காக வேலையை பறிகொடுத்திருக்கிறார் இளம்பெண்!.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஐஸ்கிரீமில் பணியாற்றியவர் டெனிஸ் ஹெல்மஸ். இவர் ஒபாமாவின் வெற்றி குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறி வினையை சம்பாதித்து இருக்கிறார்.
இவர் எழுதியது ' மீண்டும் அமெரிக்க அதிபராகியிருக்கும் ஒபாமா இன்னு 4 ஆண்டுகளில் கொல்லப்பட்டுவிடுவார்' என்பதுதான்! இவரது பதிவு பலருக்கும் அனுப்பி வைக்கப்பட பெரும் சர்ச்சையே வெடித்தது.
இதனால் ஆடிப்போன அந்த பெண் தமது பதிவையே நீக்கிவிட்டார். ஆனாலும் ஃபேஸ்புக்கில் மீண்டும் ஒரு கருத்தை பதிவு செய்தார். "எனது கருத்து இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. ஃபாக்ஸ் தொலைக்காட்சி எனது வீடு தேடி பேட்டி எடுக்க வந்து விட்டது. நான் மதவாதி என்றும் குறும்புக்காரி என்றும் கூறுகின்றனர். ஒபாமாவை நானே கொல்லப் போகிறேன் என்று நான் கூறவில்லை. ஆனால், அப்படி சம்பவம் நடந்தால், அதற்காக நான் கவலைப்படப் போவதும் இல்லை" என்று மீண்டும் குசும்பை காட்டியிருக்கிறார்.
இதற்கிடையே அவரது வேலையை ஐஸ்கிரீம் பார்லர் பறித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது.

ஆசிட் வீசி முகத்தை சிதைத்த கணவனுடன் மீண்டும் நரக வாழ்க்கை: வங்கதேச பெண்ணின் சோகம்


 Woman Is Forced Remarry The Husband டாக்கா: வங்கதேசத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்த கணவனுடன் மறுபடியும் குடும்பம் நடத்தும் வேதனைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் பெண் ஒருவர். கொடுமைக்கார கணவனிடம் இருந்து விவகாரத்து பெற்றும் இன்னமும் தனக்கு விடிவுகாலம் வரவில்லை என்று வேதனையுடன் காலம் தள்ளி வருகிறார் அந்தப் பெண்.
வங்கதேசத்தின் ஷக்திரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூர்பானு. இவர் கடந்த 18 வருடங்களாக தனது கணவரிடம் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வந்தார். அடி, உதைதான் எப்போதும். இதனால் மனம் வெறுத்துப் போன இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதை அறிந்து கோபமடைந்த இவரது கணவர் மனைவி முகத்தில் ஆசிட் வீசினார்.
இதில் நூர்பானுவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன. பார்வை நரம்புகள் சேதமடைந்ததால் பார்வை பறிபோனது. முகமும் அகோரமாகிப் போனது. இந்த நிலையில் நூர்பானுவுக்கு விவாகரத்து கிடைத்தது.
மனைவி மீது ஆசிட் ஊற்றிய பின்னர் 10 மாதம் தலைமறைவாக இருந்து வந்த நூர்பானுவின் கணவரை பின்னர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடம் சிறையில் இருந்த அவரை அவரது தாயார் ஜாமீனில் வெளியே அழைத்து வந்தார்.
அதன் பிறகு நூர்பானு, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு அவரது மாமியார் மிரட்டியும், வற்புறுத்தியும், வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார். நூர்பானுவின் மகன்களைப் பிரித்து வைத்து மிரட்டி அவரை தனது வீட்டுக்குக் கூட்டிப் போய் விட்டாராம் மாமியார். இதனால் மறுபடியும் நரகத்திற்குத் தள்ளப்பட்டார் நூர்பானு. தற்போது பெரும் நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் கணவருடன் வசித்து வரும் நூர்பானு அதே அடி உதையுடன் மறுபடியும் கஷ்டத்தில் சிக்கியுள்ளாராம்.
தன்னை ஆசிட் ஊற்றி சீரழித்த கணவரையே மீண்டும் மணந்து கொண்டு குடும்பம் நடத்துமாறு நூர்பானுவை அவரது கணவர் குடும்பத்தார் நிர்பந்தம் செய்து வருகிறார்களாம்.
இவரது நிலை குறித்து விஎஸ்ஓ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆவணப் படமாக தயாரித்துள்ளது. வங்கதேசத்தில் கணவர்களிடம் சிக்கி கொடுமைப்படும் மனைவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் ஆசிட் வீச்சுக்களும் அங்கு சகஜமாம்.

‘குரான்’ மனப்பாடம் செய்ய முடியாத மகனை அடித்துக் கொன்ற இந்தியப் பெண்: இங்கிலாந்தில் பரபரப்பு


லண்டன்: இங்கிலாந்தில் குரான் பாடலை மனப்பாடம் செய்யாத மகனை அடித்துக் கொலை செய்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர். இந்த சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த யூசுப் இங்கிலாந்தில் கார்டிப் என்ற இடத்தில் தனது மனைவி சாராவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லியும், பாடல்களை மனப்பாடம் செய்யச் சொல்லியும் தனது மகன் யாசினை அடிக்கடி சாரா அடிப்பாராம்.
இருந்தாலும் யாசினால் குரான் பாடல்களை மனப்பாடம் செய்ய முடியவில்லை. இதனால் யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்திருக்கிறார். இதில் சிறுவன் யாசின் இறந்து போயிருக்கிறான். எனினும் அதைப்பற்றி கவலைப்படாத சாரா, யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து, கருகிய உடலை குழிதோண்டி புதைத்திருக்கிறார்.
இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆரம்பக் கட்ட விசாரணையின்போது, தனது மகன் சாவுக்கு தான் காரணம் இல்லை என சாரா மறுத்து வந்தார். அதேநேரம் தனது கணவன் யூசூப்தான் காரணம் என்றும் கூறினார். இந்நிலையில், சாரா தனது மகனை அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
குரானை மனப்பாடம் செய்ய முடியாத காரணத்திற்காக பெற்ற மகனையே அடித்து கொலை செய்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கு அடுத்த ஆண்டு நவம்பரில் விண்கலம் அனுப்ப முடிவு: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்


 Mars Mission Aimed At Scientific De ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்துக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்கலம் அனுப்பபடும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி.- சி21 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
செவ்வாய்க் கிரகம் பூமிக்கு அருகே 2013, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் வருகிறது. அடுத்த ஆண்டில் செவ்வாய்க்கு விண்கலத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் மூன்றாவது வாரத்திலிருந்து நவம்பர் மாதத்துக்குள் இது செலுத்தப்படும். இதற்கான பணியில் 2010 முதலே ஈடுபட்டு வருகிறோம்.
300 நாள் பயணம்
செவ்வாயின் நீள்வட்டப் பாதையில் இந்த விண்கலத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். குறைந்தபட்சம் 500 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இந்தப் பாதை இருக்கும். இதற்காக புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது.செவ்வாய்க் கிரகத்தில் மீத்தேன் வாயுவைக் கண்டறியவும், அந்தக் கிரகத்தை அடைவதில் உள்ள சவால்களை அறியவுமே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.செவ்வாய்க் கிரகத்துக்கு செல்ல விண்கலம் 300 நாள்கள் பயணிக்க வேண்டியிருக்கும்.
பூமியிலிருந்து சுமார் 55 மில்லியன் கிலோ மீட்டர் முதல் 400 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க நேரலாம் என்பதால் அங்கிருந்து தொடர்புகொள்வதற்கான தொலைத்தொடர்பு சாதனங்களையும் உருவாக்க வேண்டும்.
சந்திரயான் விண்கலத்திலிருந்து பெற்ற அனுபவத்தைக் கொண்டு எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் வகையில் இந்த விண்கலம் உருவாக்கப்படும். செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தின் முதன்மையான நோக்கம் செவ்வாய்க் கிரகத்தின் பாதையை அடைவதாக இருக்கும். இது சீனாவுக்குப் போட்டியானது அல்ல என்றார் அவர்.

இஸ்ரோவுக்குள் நுழைந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகளாக 'கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர்' மனநலப் பிரச்சனை!



 Isro Security Breach Ahmedabad Women
பெங்களூர்: பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்த பெண் கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் என்னும் மனநலப் பிரச்சனைக்காக கடந்த 7 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதான அகமதாபாத் பெண் பியூலாவுக்கு கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் என்னும் மனநலப் பிரச்சனை உள்ளது. அவர் இந்த பிரச்சனைக்காக கடந்த 7 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் பிரச்சனை உள்ளவர்கள் தாஙகள் பிரபலமானவர்கள் என்றும், பணக்காரர்கள் என்றும், சக்தி படைத்தவர்கள் என்றும் தங்களைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக்கொள்வார்களாம்.
இந்நிலையில் பியூலா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இஸ்ரோவுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. பியூலா கேரள மாநிலத்தில் உள்ள புணலூரில் இருக்கும் ஜனா போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடுத்துள்ளார். அங்கிருந்து தான் அவர் போலி ஐடி கார்டு தயாரித்துள்ளார். இதையடுத்து கர்நாடக போலீசார் கேரளா சென்று அந்த போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் சினி பாலனை விசாரித்தனர்.
விசாரணையில் பாலன் கூறுகையில், பியூலா எனது ஸ்டுடியோவுக்கு வந்து போட்டோ எடுத்து அதை ஒரு கார்டில் வைத்து லேமினேஷன் செய்தார். ஆனால் அது என்ன கார்டு என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். புணலூரில் உள்ள ஸ்பார்க் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரிடமும் கர்நாடக போலீசார் விசாரித்து வருவதாக கொல்லத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர பியூலாவுக்கு உதவிய இஸ்ரோ என்ஜினியரிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கர்நாடக போலீஸ் தனிப்படை அகமதாபாத்தில் உள்ள பியூலாவின் வீட்டுக்கு நேற்று சென்று விசாரணை நடத்தியது. அவரது குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது கணவர் அலெக்ஸ் தாமஸ் அகமதாபாத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். அங்கும் சென்று போலீசார் விசாரித்தனர்.
பியூலா படிக்கும் காலத்தில் விண்வெளி ஆய்வு விஞ்ஞானியாக வேண்டும் என்று விரும்பியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புணலூரில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள கூனம்குழிக்கு சென்ற போலீசார் அங்குள்ள பியூலாவின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பியூலா கடந்த 11ம் தேதி புணலூர் சென்றுள்ளார். அவர் பேருந்து மூலம் மும்பை வழியாக அகமதாபாத் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கடந்த 18ம் தேதி கிளம்பியுள்ளார். ஆனால் அவர் அகமாதாபாத் செல்லாமல் பெங்களூர் வந்து இஸ்ரோ விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
இதற்கிடையே பியூலாவிடம் நடத்திய விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதலைப் பண்ணைக்குள் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட தாய்லாந்து பெண்


பாங்காக்: வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட தாய்லாந்து பெண் ஒருவர், முதலை பண்ணைக்குள் குதித்து முதலைக்கு தானாக இரையாகி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது..
தாய்லாந்தின் பாங்காக் நகரை சேர்ந்தவர் திபாவன் பிரக்ரன்(36). இவரது கணவர் சுனை ஜிசாத்ரா(55). வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட திபாவன், பாங்காக்கில் உள்ள முதலை பண்ணையை பார்த்துவிட்டு, அப்படியே டாக்டரையும் சந்தித்து விட்டு வருவதாக கணவனிடம் கூறி சென்றுள்ளார்.
ஆனால் அதன்பிறகு திபாவன் வீடு திரும்பவில்லை. இது குறித்து விசாரித்த போது, திபாவன் முதலை பண்ணைக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. ஆனால் அவரது கணவர் சுனை, முதலை பண்ணையில் உள்ள பணியாளர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் தனது மனைவி முதலை பண்ணையில் தவறிவிழுந்து பலியாகி உள்ளார். எனவே இதற்கு தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் முதலை பண்ணையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்த போது, திபாவன் தானாக முன்வந்து முதலை பண்ணைக்குள் குதித்து முதலைக்கு இரையாகி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து சுனை கூறியதாவது, தனது மனைவிக்கு இருந்த மனவிரக்தியில் இருந்து விடுபட அவர் தற்கொலை செய்துள்ளார். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றார். முதலை பண்ணை நிர்வாகம் இந்த சம்பவத்தை மறுத்துள்ளது.


முதலைக்காக கணவரை விவாகரத்து செய்த ஆஸ்திரேலிய பெண்மணி


19 Australia Vicky Woman Crocodile Husband
மெல்போர்ன்: 'ஆத்துக்காரர்' சவுண்டாக குறட்டை விட்டாலே டிவோர்ஸ் கேட்பவர்கள் வெள்ளையர்கள். அப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஒரு பெண்மணி, தான் ஆசை ஆசையாய் வளர்க்கும் முதலைகளை வெறுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக தனது கணவரையே டிவோர்ஸ் செய்து விட்டார்.
ஆஸ்திரேலியாவில்தான் இந்த அக்கப்போர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் விக்கி லோவிங். முதலைப் பிரியை. பிரியை என்று சொல்ல முடியாது, வெறியை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தஅளவுக்கு முதலை என்றால் இவருக்கு உயிர்.
இவர் வீட்டில் நாய்களை விட முதலைகள்தான் நிறைய. வீடு முழுக்க தொட்டிகளை வைத்து அதில் முதலைகளைப் போட்டு நிரப்பி வைத்துள்ளார் விக்கி. அதில் 14 வயதான முதலைதான் இருப்பதிலேயே வயதான முதலை. வீட்டின் பாத்ரூம் உள்பட அனைத்து இடங்களிலும் முதலைகளைக் காண முடியும்.
இதற்காக ஆங்காங்கு தொட்டிகளை வைத்து அதில் முதலைகளை விளையாட விட்டுள்ளார் விக்கி. 8 அடி நீளமுடைய ஒரு குட்டி முதலைக்கு வீட்டுக்குள் இடம் இல்லாததால், கார் காரேஜில் ஒரு தொட்டியைக் கட்டி அதில் மிதக்க விட்டுள்ளார்.
இதுகுறித்து விக்கி கூறுகையில், நிறையப் பேர் என்னிடம் கேட்டு விட்டார்கள், எனது அம்மா கூட கேட்டார், ஏன் இவற்றை கட்டிக் கொண்டு மாரடிக்கிறாய், விட்டு விடு என்று. நான் தான் கேட்கவில்லை. எனக்கு அவர்களை மிகவும் பிடிக்கும், அவர்கள்தான் எனது குழந்தைகள்.
நாம் காட்டும் அன்புக்கு பதில் அன்பைக் காட்டும் விலங்குகள். நமது அன்பு அவர்களுக்குப் புரியும். அதேபோல இந்த விலங்குகள் மீது நான் வைத்துள்ள அன்பு உங்களுக்குப் புரியாது என்கிறார் கண்களைச் சிமிட்டி சிரித்தபடி.
வீட்டில் ஒரு பூணையாரும் உண்டு. ஆனால் முதலைப் பக்கம் அவர் போவதே இல்லை, எதற்கப்பா வம்பு என்று.
கடந்த வருடம் விக்கிக்கும், அவரது கணவர் ஜானிக்கும் இடையே முதலைகளால் கடும் சண்டை. நான் வேண்டுமா, முதலை வேண்டுமா என்று ஜானி கேட்க, கட்டிக் கொண்ட கணவரை விட, அன்பால் கட்டுண்டு கிடக்கும் இந்த முதலைகள்தான் தேவை என்று அதிரடி முடிவெடுத்து ஜானியை விவாகரத்து செய்து விட்டாராம்.
இப்போது ஜானியின் தொந்தரவு இல்லாமல் முதலைகள் படு சந்தோஷமாக நீரில் நீந்திக் கொண்டிருக்கின்றனவாம்.

முதலையின் வாயில் காலைக் கொடுத்து மீண்ட 23 வயது அழகி!


டுகாங்க் பே, ஆஸ்திரேலியா: மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டுகாங்க் பே என்ற இடத்தில் முதலையிடம் சிக்கிய 23 வயது இளம் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டு விட்டது. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவரை அவரது நண்பர்கள் மீட்டனர்.
அந்தப் பெண்ணின் பெயர் தாரா ஹாக்ஸ். பார்க்க படு அழகானவர். இவர் டுகாங்க் பே என்ற சுற்றுலாத் தளத்திற்குச் செல்லும் சொகுசுக் கப்பலில் பணியாளராக பணியாற்றி வருகிறார். கப்பல் பயணத்தின்போது அவர் தனது வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலை சந்திக்க நேரிட்டு விட்டது.
அங்குள்ள குளம் ஒன்றில் அவர் இறங்கி நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு முதலை வந்து விட்டது. வந்த முதலை, படு வேகமாக தாராவின் காலைக் கவ்விக் கொண்டது.
கால் முதலையின் வாயில் சிக்கியதைப் பார்த்து அலறித் துடித்தார் தாரா. அய்யோ, செத்தேன் என்று பயத்தில் அவர் அலறினார். முதலையும் தாராவின் காலை மெதுவாக வாய்க்குள் இழுக்க ஆரம்பித்தது.
இதைப் பார்த்து ஓடி வந்தார் தாராவின் நண்பர் ஆலன். முதலையின் வாயைப் பிடித்து பிரிக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து முதலையின் கண்களில் சரமாரியாக அவர் குத்தினார். இதில் முதலை நிலை குலைந்து வாயைத் திறந்து பின்வாங்கியது. அதன் பின்னர் ஆலனும், இன்னொருவரும் சேர்ந்து பலம் கொண்ட மட்டும் முதலையைப் பிடித்து இழுத்தனர். அதில் பயந்து போன முதலை வேகமாக தண்ணீருக்குள் ஓடி விட்டது.
உடனடியாக சொகுசுக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் தாராவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அவரது கால் அதிர்ஷ்டவசமாக பெரும் காயமின்றித் தப்பியது. இருப்பினும் காலில் பல இடங்களில் முதலையின் பல் பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. தொடைப் பகுதியில்தான் காயம் அதிகமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
சற்று தாமதித்திருந்தாலும் தொடையிலிருந்து முழுக் காலையும் முதலை சாப்பிட்டிருக்கும், ஒரு காலையே தாரா இழந்திருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கர அனுபவம் குறித்து தாரா கூறுகையில், காலை நீரில் வைத்து நான் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நான் உள்ளுக்குள் இழுக்கப்பட்டேன். பிறகுதான் தெரிந்தது என்னை இழுத்தது ஒரு முதலை என்று. சிரமப்பட்டு நான் வெளியே வந்து தலையை தூக்கி முதலை முதலை என்று கத்தினேன். ஆனாலும் அது விடாமல் மீ்ண்டும் இழுத்தது. ஏதோ டெடி பியர் பொம்மையை வைத்து விளையாடுவது போல என்னை மேலும் கீழுமாக இழுத்து விளையாடியது.
அது எனது காலை பிடித்திருந்ததே ஒழிய கடிக்கவில்லை. ஆனால் அதன் பற்கள் எனது காலில் ஆழமாக புதைந்து வருவது போல தோன்றியது. மேலும் நான் சாகப் போகிறேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் எனது நண்பர்கள் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றி விட்டனர் என்றார் தாரா.

உள்ளத்தைக் கொடு, இல்லாவிட்டால் உயிரை விடு... பெருகி வரும் கொடூரக் காதலர்கள்!


சென்னை: காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு; காதலிக்க மறுத்த பெண்ணை கோடாரியால் வெட்டி கொலை செய்த மாணவன்; காதலுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்.... இவை எல்லாம் இந்தவார ஊடகங்களில் வெளியான செய்திகள்.
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. இருவருக்கும் அதே உணர்வு ஏற்பட்டால் மட்டுமே அது மலர்ந்து மணம் வீசும். ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒருதலையாக தோன்றும் காதலுக்கு எதிராளி யாரும் பொறுப்பாக முடியாது. மாய்ந்து மாய்ந்து காதலித்து விட்டு அந்த காதல் மறுக்கப்படும்போது காதலியை குரூமாக இம்சிப்பதும் அதையும் தாண்டி கொலை செய்வதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

கோடாரியால் வெட்டிய குரூரம்

அரியானா மாநிலம் ஹிசாரில் குரு ஜம்பேஸ்வரர் பல்கலைக் கழகத்தில் பிடெக் படித்து வந்த மாணவி கீதிகா மேதாவும் அதே பல்கலை கழகத்தில் படிக்கும் பிரதீப் என்ற மாணவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். திடீரென கீதிகா மீது பிரதீப்புக்கு காதல் ஏற்பட்டது. இதனை கீதிகாவிடம் கூறியபோது அதற்கு கீதிகா மறுத்து விட்டார். இதன்பின்னர் பிரதீபிடம் பேசுவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்திலேயே கீதிகாவை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரதீப்.


தாயின் முதுகு தண்டை வெட்டி, 94 தடவை கத்தியால் குத்திக் கொன்ற மகன்


 16 Year Old Boy Stabs Mother 94 Times லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது பையன் ஒருவன் தனது தாயின் முதுகு தண்டை அறுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை 94 தடவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான்.
இங்கிலாந்தில் உள்ள வேமவுத்தைச் சேர்ந்தவர் லீ விட்டில்(42). கணவரிடம் இருந்து விவாகரத்தான அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். 3 பிள்ளைகளில் 16 வயது மகனும் அடக்கம். அவனுக்கு கத்திகள் மீது அதீத ஈடுபாடு உள்ளது. கடந்த ஜூலை மாதம் அவன் தனது தோழிகளிடம் தனது தாய் இன்னும் சில நாட்கள் தான் வாழ்வார் என்று தெரிவித்துள்ளான். அதற்கு அவர்கள் ஒருவேலை லீக்கு ஏதாவது நோய் உள்ளதோ என்று நினைத்துக் கொண்டனர்.
பின்னர் அவன் வீட்டில் தனியாக இருந்த தனது தாயை முதலில் அவரது முதுகுத் தண்டில் கத்தியால் குத்தினான். முதுகுத் தண்டில் குத்தினால் தான் அவர் எங்கும் ஓட மாட்டார் என்றே அவ்வாறு செய்துள்ளான். பின்னர் அவரை 94 முறை குத்திக் கொன்றான். அதன் பிறகு அந்த ரத்தக் கரையோடு தோழிகளை சந்திக்க சென்றுவிட்டான். அவர்கள் கேட்டதற்கு யாரோ மர்ம நபர்கள் தங்கள் வீட்டுக்குள் புகுந்து தனது தாயைக் கொன்றுவிட்டதாகக் கதை கட்டினான்.
அவனது உடலில் ஏன் ரத்தக் கரை இருக்கிறது என்று கேட்டதற்கு பயந்துபோய் பைப் வழியே இறங்கி வந்ததில் அடிபட்டுவிட்டது என்று கூறியுள்ளான். பின்னர் தான் அவன் நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது. போலீஸ் விசாரணையில் தனது தாயை தானே கொடூரமாகக் கொன்றதை அவன் ஒப்புக் கொண்டான். அதன் பிறகு அவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காதலிப்பதாக கூறி 3 வாலிபர்களை ஏமாற்றி பணம் பறித்த கேரள பெண்.. போலீஸ் தேடுகிறது


சென்னை: பல இளைஞர்களை காதல் வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்த கேரளவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆர்.சரவணன், அடையாறை சேர்ந்த ஏ.சரவணன், தியாகராய நகரை சேர்ந்த ராஜா ஆகிய 3 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அதில், பெண் ஒருவர் தங்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி ரூ.10 லட்சம் வரை பணத்தை பறித்து விட்டதாக புகார் கூறியுள்ளனர்.
இவர்கள் 3 பேரிடமும் ஒரு பெண் முதலில் செல்போன் மூலம் பேசி இருக்கிறார். தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் நேரிலும் பலமுறை சந்தித்துள்ளார். செக்ஸ் வலையிலும் வீழ்த்தியதோடு திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். சொந்த ஊரான திருவனந்தபுரம் போக வேண்டும், வீட்டில் பணப் பிரச்சனை என்று காரணம் கூறி அவ்வப்போது பணமும் வசூலித்துள்ளார்.
மலையாளம் கலந்த தமிழில் பேசியுள்ள அந்தப் பெண்ணை இவர்கள் செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். அதையும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் பலரும் அந்தப் பெண்ணிடம் மோசம் போய் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணிடம் மேலும் யாரும் மோசம் போகாமல் இருக்கவும், ஏமாந்தவர்கள் புகார் கொடுப்பதற்காகவும் அந்த பெண்ணின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம்.

'பெருசா' இல்லாட்டி பெண்ணே கிடையாது.. கவர்ச்சி மாடல் விளாசல்!


 Curvy Babe Stanley Blasts Skinny Girls லண்டன்: பெண்கள் என்றால் எல்லாமே எடுப்பாக இருக்க வேண்டும். முன்னழகு, பின்னழகு ஆகியவை எடுப்பாக இருக்க வேண்டும். நன்கு பெரிதான மார்பகங்கள் இருக்க வேண்டும். இடுப்பு துடிப்புடன் திகழ வேண்டும். இவையெல்லாம் இல்லாவிட்டால் நிச்சயம் அவள் ஒரு பெண்ணாகவே இருக்க முடியாது என்று அதிரடியாக கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த கவர்ச்சிகரமான மாடல் அழகியான டிப்பானி ஸ்டான்லி.
24 வயதாகும் டிப்பானி, இங்கிலாந்தின் டாப் மோஸ்ட் மாடல்களில் ஒருவர், எடுப்பான, துடிப்பான அழகுக்குச் சொந்தக்காரி. இவர் இளம் மாடல்களுக்கு அறிவுரை கூறுவது போல சிலவற்றைக் கூறியுள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், ஒல்லிக் குச்சியாக இருப்பது அழகும் அல்ல, கவர்ச்சியும் அல்ல. அதிக அளவில் டயட்டைக் கடைப்பிடிக்கும் பெண்ணைக் கண்டாலே எனக்கு சிரிப்புதான் வரும். மாடலிங்குக்கு வரும் இளம் பெண்கள் தயவு செய்து உடம்பை பூசினாற் போல வைத்துக் கொள்வதுதான் நல்லது.
சைஸ் ஜீரோ மீதான மோகம் இப்போது போய் விட்டது. அதற்கு ஜெனீபர் லோபஸே நல்ல உதாரணம். அவருக்கு அவருமையான பெண்ணை ததும்பி வழியும் உடல்வாகு உள்ளது. அனைவரையும் கவருபவராக அவர் இருக்கிறார்.
பெண்களின் உடலானது கவர்ச்சிகரமாக, வளைவு நெளிவுகளுடன் இருப்பதுதான் அழகானது. அப்படி இல்லாதவர்களை பெண்கள் என்றே கூற முடியாது.
நான் நன்கு சாப்பிடுகிறேன், ஜிம்முக்குப் போகிறேன். ஆனால் உடம்பைத் துரும்பாக இளைத்துப் போக விட மாட்டேன். வாரத்திற்கு இரண்டு நாள்தான் நான் ஜிம்முக்குப் போவேன்.
நான் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதாலும், எனது முன்னழகு மிகவும் எடுப்பகா இருப்பதாலும், பலரும் டாப்லெஸ் போஸ் கேட்டு வற்புறுத்துகின்றனர். ஆனால் அதை எனது பெற்றோர் விரும்ப மாட்டார்கள் என்று கூறுகிறார் டிப்பானி.

சீனாவுக்கு ஒரு வழியாக 'குட்-பை' சொன்னது கூகுள்!


பெய்ஜிங்: பிரபல சர்ச் என்ஜின் நிறுவனமான கூகுள் டாட் காம், தனது பிரதான சீனமொழி தேடுதளம் மூலம் (google.cn) சேவைகள் வழங்குவதை நிறுத்திக் கொண்டது.

எனினும், சீன மொழிக்கான தேடுதல் சேவைகளை ஹாங்காங்கில் இருந்து தொடரப் போவதாக அது அறிவித்துள்ளது.

google.cn எனும் சீன மொழியில் அமைந்திருந்த தேடு தளத்திற்கு வரும் பார்வையாளர்கள், google.com.hk என்ற தளத்திற்கு திருப்பிவிடப்படுவார்கள் என கூகுள் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இத்தகவல் வெளியான உடனடியாக பெய்ஜிங்கில் உள்ள கூகுள் நிறுவனத்தின் சீன தலைமையக அலுவலகத்தின் முன்பு ஏராளமானோர் இன்று காலை கூடிவிட்டனர்.

இன்டர்நெட் அக்கவுன்டில் அத்துமீறி ஹாக்கிங் செய்யப்பட்டது, தகவல்கள் திருடப்பட்டது என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக சீனாவுடன் முட்டிக்கொண்டிருந்த கூகுள் எந்நேரமும் வெளியேறலாம் என்ற சூழல் தான் கடந்த சில வாரங்களாக காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று கூகுள் தனது அதிகாரப்பூர்வ முடிவை செயல்படுத்தி உள்ளதால், சீனாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலையும், முதலீட்டாளர்களின் நிலையும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள கூகுள் தலைமையக செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில்,

'இது வழக்கமான வர்த்தக நடைமுறை தான். பணியாளர்கள் அனைவரும் ஹாங்காங்கிற்கு மாற்றப்படுவார்களா என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. இவையாவும் வர்த்தக செயல்பாடுகளுக்கான மாற்று ஏற்பாடுகள் மட்டுமே' என்றார்.

கூகுளின் இந்த முடிவு 'முற்றிலும் தவறானது' என்று சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு சீனாவை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் சீனா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் கூகுளுக்கு கடுப்படிக்கும் வகையில் தொடர்ந்து சீனா செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததுதான். கூகுளைப் போலவே போலியான ஒரு இணையதளமும் சீன மொழியில் வெளியானது. அதேபோல யூடியூபை அப்படியே காப்பி அடித்து சீன மொழியில் ஒரு இணையதளம் வெளியானது.
இதுகுறித்து சீன அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்தது. இந்த நிலையில்தான் சீனாவை விட்டு வெளியேறியுள்ளது கூகுள்.

உலக அளவில் 38 கோடி இன்டர்நெட் பார்வையாளர்களை கொண்ட சீன சந்தையில் இருந்து கூகுள் வெளியேறுவது இணைய பொருளாதாரத்தில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

40 ஆண்டுகளாக நிலவில் பறக்கும் அமெரிக்க கொடிகள்: நீல் ஆம்ஸ்ட்ராங் நட்ட கொடி மட்டும் சேதம்


வாஷிங்டன்: அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் அங்கே நட்டு வைத்த கொடிகள் இன்னும் சேதமடையாமல் பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் முதன் முதலாக நிலவில் கால் வைத்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் 5 முறை நிலவுக்கு சென்று வந்துவிட்டனர். கடந்த 1972ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அப்போலோ 17 விண்கலத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றது தான் நிலவுக்கு அமெரிக்கர்கள் கடைசியாகச் சென்றதாகும்.
இந்த 6 முறையும் தங்கள் பயணத்தின் நினைவாக விஞ்ஞானிகள் அமெரிக்க கொடியை நிலவில் நட்டு வைத்தனர். அந்த கொடிகளில் நிலவுக்கு முதன் முதலாகச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் நட்டுவைத்த கொடியைத் தவிர மற்ற 5 கொடிகள் நிலவின் தட்பவெட்பத்தையும் தாண்டி இத்தனை ஆண்டுகள் கழித்தும் பறந்து கொண்டிருக்கின்றன. நாசாவின் கேமரா எடுத்துள்ள புகைப்படத்தில் இந்த கொடிகள் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.
தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறினாலும் இதுவரை அமெரிக்க விஞ்ஞானிகள் மட்டுமே நிலவில் கால் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி கிரகத்தின் நிலா 'டைட்டன்' பூமியை போன்றது: விஞ்ஞானிகள்


நியூயார்க்: சனி கிரகத்தின் துணை கோளான (நிலா) 'டைட்டன்' பூகோளரீதியில் (geology) பூமியை போன்றே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சனி கிரகத்தின் ஏராளமான துணைக் கோள்களில் மிகப் பெரியது டைட்டன் தான். இந்தக் கோளில் பூமியைப் போன்றே ஏராளமான ஆறுகள் உள்ளன. ஆனால், அதில் நீருக்குப் பதில் திரவ நிலையில் மீத்தேன் தான் ஓடிக் கொண்டுள்ளது.
அதே போல சூரிய மண்டலத்தில் உள்ள பிற துணைக் கோள்கள், நிலாக்களில் காணப்படும் ஏராளமான கிரேட்டர்கள் எனப்படும் மேடு, பள்ளங்கள் இதில் இல்லை. விண் கற்கள் தாக்குதல்களால் ஏற்படும் இந்த மேடு, பள்ளங்கள் டைட்டனில் காணப்படாததற்குக் காரணம் இதுவரை தெரியாமல் இருந்தது.
ஆனால், பூமியைப் போன்ற டைட்டனிலும் கண்டத் திட்டுகள் நகர்வு உள்ளிட்ட நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் இந்த மேடு, பள்ளங்கள் மறைந்துவிடுவது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் டைட்டனின் புவியியல் தன்மை கிட்டத்தட்ட பூமியை ஒத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1950களில் நிலவை அணுகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்ட அமெரிக்கா


வாஷிங்டன்: 1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க 'புராஜெக்ட் ஏ119' என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.
இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேரதிச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஹைட்ரஜன் குண்டை விண்கலத்தில் அனுப்பினால் அது மிகவும் கனமாக இருக்கும் என்பதால் அணு குண்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தால் பூமியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களை கருத்தில் கொண்டு ராணுவ அதிகாரிகள் இம்முயற்சியைக் கைவிட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோவியத் யூனியன் ஸ்புட்னிக்கை அனுப்பியதால் ஆத்திரமடைந்தே இந்தத் திட்டத்தைத் தீட்டியது அமெரிக்கா மேலும் சோவியத் யூனியனை விட தானே வலிமையானவன் என்பதை நிரூபிக்கவும் இந்த திட்டத்தை தீட்டியது அமெரிக்கா.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamilgunda - All Rights Reserved
Template Created by Creating Website
Proudly powered by Blogger