சென்னை: காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு; காதலிக்க மறுத்த பெண்ணை கோடாரியால் வெட்டி கொலை செய்த மாணவன்; காதலுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்.... இவை எல்லாம் இந்தவார ஊடகங்களில் வெளியான செய்திகள்.
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. இருவருக்கும் அதே உணர்வு ஏற்பட்டால் மட்டுமே அது மலர்ந்து மணம் வீசும். ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒருதலையாக தோன்றும் காதலுக்கு எதிராளி யாரும் பொறுப்பாக முடியாது. மாய்ந்து மாய்ந்து காதலித்து விட்டு அந்த காதல் மறுக்கப்படும்போது காதலியை குரூமாக இம்சிப்பதும் அதையும் தாண்டி கொலை செய்வதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
கோடாரியால் வெட்டிய குரூரம்
அரியானா மாநிலம் ஹிசாரில் குரு ஜம்பேஸ்வரர் பல்கலைக் கழகத்தில் பிடெக் படித்து வந்த மாணவி கீதிகா மேதாவும் அதே பல்கலை கழகத்தில் படிக்கும் பிரதீப் என்ற மாணவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். திடீரென கீதிகா மீது பிரதீப்புக்கு காதல் ஏற்பட்டது. இதனை கீதிகாவிடம் கூறியபோது அதற்கு கீதிகா மறுத்து விட்டார். இதன்பின்னர் பிரதீபிடம் பேசுவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்திலேயே கீதிகாவை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரதீப்.
0 comments:
Post a Comment